ஹர்ஷ இலுக்பிட்டியவின் பிணைமனுக் கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் நிராகரிப்பு
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவின் பிணை மனுக் கோரிக்கை உச்சநீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த டிரான் அலஸ், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு இணையத்தள வழியாக விசா வழங்கும் செயற்பாட்டை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதியைப் பெற்றிருந்தார்.
எனினும், அதற்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஐக்கிய குடியரசு கட்சித் தலைவர் சம்பிக ரணவக மற்றும் தமிழரசுக் கட்சியின் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
பிணை மனுக் கோரிக்கை
அதன் விசாரணைகளின் முடிவில் டிரான் அலஸின் தீர்மானத்தை இடைநிறுத்த உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், விசா வழங்கும் செயற்பாட்டில் முன்னைய நடைமுறையைப் பின்பற்றுமாறு உத்தரவிட்டது.
எனினும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகமாக இருந்த ஹர்ஷ இலுக்பிட்டிய, குறித்த உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியதை அடுத்து, அவர் மீது நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கடந்த ஆண்டின் செப்டம்பர் 25ஆம் திகதி வரை விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
அன்று தொடக்கம் இதுவரை தொடர்ச்சியாக விளக்கமறியலில் இருக்கும் ஹர்ஷ இலுக்பிட்டிய, உச்சநீதிமன்றத்தில் பிணை மனுக் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தார்.
எனினும், அதனை நிராகரித்த உச்சநீதிமன்றம், எதிர்வரும் மே மாதம் 08ஆம் திகதி தொடக்கம் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு எதிரான மனுவை விசாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
