சஜித் பிரேமதாச தொடர்பில் ஹர்ஷ டி சில்வா அதிருப்தி
ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்டத் தலைவர்கள் நியமனம் விடயத்தில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்பில் ஹர்ஷ டி சில்வா எம்.பி. அதிருப்தியுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்டத் தலைவர்களுக்கான நியமனம் அண்மையில் வழங்கப்பட்டது.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, கொழும்பு மாவட்ட தலைமைத்துவத்தை தன் வசம் வைத்துக் கொண்டுள்ளார்.
கட்சியில் தொடர்ந்தும் பயணம்
இது நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான தன்னை கொழும்பு மாவட்டத் தலைவராக நியமித்திருந்தால் அதுவே பொருத்தமானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ள அவர், இருந்தும் தான் தொடர்ந்தும் கட்சியில் இணைந்து பயணிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
