நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு ஜனநாயகத்துக்கு முரணான செயல் - ஹர்ஷ டி சில்வா கடும் விமர்சனம்
உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீட்டிப்பதற்காக அரசு முன்னெடுக்கும் முயற்சிகள் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணானவை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
நீதித்துறை தொடர்பான இந்த அரசின் தன்னிச்சையான போக்கு குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு விமர்சித்தார்.
கொள்கை ரீதியிலான விவாதம்
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என அனைத்துத் துறையினரினதும் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக ஒரு பொதுவான கொள்கை ரீதியிலான விவாதம் அவசியம்.
அதை விடுத்து, திடீரென ஒரு சட்டமூலத்தைக் கொண்டுவந்து குறிப்பிட்ட சில நீதியரசர்களின் பதவிக்காலத்தை மாத்திரம் நீடிக்க முற்படுவது முற்றிலும் ஜனநாயகத்துக்கு விரோதமானது.
அரசமைப்பில் திருத்தம் மேற்கொள்வது என்பது, வெறும் 8 அல்லது 16 நபர்களின் பதவிக்காலத்தை நீடிப்பதற்காக இருக்குமாயின், அது ஓர் அப்பட்டமான அரசியல் தேவைக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும். இத்தகைய போக்கு நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்புச் சட்டத்தை அரசியல் மயமாக்கிவிடும்.

மோசமான விளைவுகள்
முன்னொரு காலத்தில் நாடாளுமன்றத்தின் பலத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க முற்பட்டபோதும், பிரதம நீதியரசரைப் பதவியிலிருந்து நீக்கியபோதும் நாடு பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அந்த மோசமான விளைவுகளை நாம் ஏற்கனவே கண்டுள்ளோம்.
எனவே, அரசு எதிர்க்கட்சிகளின் குரல்களை மட்டுமன்றி, நாட்டின் கல்விமான்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகியவற்றின் கருத்துகளுக்கும் மதிப்பளித்து, இந்தத் தவறான நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. விஜய்யை தொடர்ந்து ரஜினி செய்யப்போகும் பிரம்மாண்ட விஷயம் Cineulagam