அரசாங்கத்தின் கூற்றை சவாலுக்குட்படுத்த ஹர்ஷ டி சில்வா நடவடிக்கை
சட்டவிரோதமான முறையில் நாட்டில் இருந்து அந்நியச் செலாவணி வெளிப்பாய்ச்சப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ள கூற்றை சவாலுக்குட்படுத்த ஹர்ஷ டி சில்வா எம்.பி. தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (ஜுன் 25) நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்த 2023ஆம் ஆண்டு முதல் வுவு (தந்திவழிப் பணப் பரிமாற்றம்) அமைப்பு மூலம் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டொலர்கள் சட்டவிரோமான முறையில் நாட்டிலிருந்து வெளியே அனுப்பப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியிருந்தார்.
கருத்தை சவாலுக்குட்படுத்த
இறக்குமதிப் பொருட்களுக்கான முன்பணம் என்ற பேரில் குறித்த அந்நியச் செலாவணி வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதன் மூலம் எந்தவொரு பொருளும் இறக்குதி செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் குறித்த கருத்தை ஆதரித்து, அதே கருத்தை மெருகூட்டி அமைச்சர்கள் பலரும் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதியின் கருத்தை சவாலுக்குட்படுத்த நாடாளுமன்ற பொதுநிதிக்குழுவின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதியின் கூற்றை ஆதரிக்க உறுதியான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, அடுத்த வாரம் மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகளை அழைக்க பொது நிதிக் குழுத் தலைவர் ஹர்ஷ டி சில்வா முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
YOU MAY LIKE THIS VIDEO
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam