சிறுமி ஒருவரை பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கியவருக்கு கடூழிய சிறை தண்டனை
கிளிநொச்சி முறிப்பு பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு பதினான்கு வயது சிறுமி ஒருவரை பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல்நீதிமன்றம் பத்து ஆண்டு கால கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்ததுள்ளது
கடந்த 2015 ஆம் ஆண்டு 14 வயது நிரம்பிய சிறுமி ஒருவரை பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கியமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாரால் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வழக்கானது நேற்று முன்தினம் (30-09-2025) கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி A.G அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமி
இதன்போது குறித்த பிரதிவாதி மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமி அவரது தாயார் மன்றில் முன்னிலையாகி இருந்த நிலையில் இச்சபவத்துடன் தொடர்புபட்ட நபருக்கு பத்து ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன் ஐயாயிரம் ரூபாய் தண்ட பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து இலட்சம் ரூபாய் நட்ட ஈடு செலுத்துமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



