ஹரி - மேகன் இருவருக்கும் ஆதரவு வழங்க முடியாது: ட்ரம்ப் திட்டவட்ட அறிவிப்பு
தான் அமெரிக்க ஜனாதிபதியானால், பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவியான மேகன் ஆகியோரை காப்பாற்றப்போவதில்லை என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹரி நாடுகடத்தப்படக்கூடும் என்ற கருத்து பிரித்தானியா முழுவதும் எழுந்துள்ள நிலையில் டொனால்ட் ட்ரம்பின் கருத்து பெரும் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புடன் பிரித்தானிய இளவரசர் வில்லியம் சந்தித்து பேசியமையானது ஹரி - மேகன் தம்பதியருக்கு பதற்றத்தை உருவாக்கியிருக்கக்கூடும் என ராஜ குடும்ப விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், நாட்ரிடாம் தேவாலய மறுதிறப்பு விழாவில் வைத்து குறித்த இருவருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
போதைப்பொருள் பாவனை
தனது ஸ்பேர் புத்தகத்தில், தான் பலவித போதைப்பொருட்களை சோதித்துப் பார்த்ததாக ஹரி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கும் பட்சத்தில், அவருக்கு அமெரிக்காவில் வாழ விசா கொடுக்க முடியாது என ட்ரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
எனவே, அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ட்ரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும் தங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்னும் அச்சம் ஹரி மேகன் தம்பதியருக்கு உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில் ட்ரம்பும் வில்லியமும் சந்தித்துப்பேசியுள்ளதால், ஹரி மேகன் தம்பதியர் பதற்றம் அடைந்திருக்கலாம் என ராஜ குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 12 மணி நேரம் முன்
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri