ரிஷி சுனக்கின் வெற்றி வாய்ப்பிற்கு பாதிப்பு
பிரித்தானிய பிரதமர் தோ்தலையொட்டி, பிரசாரத்தின்போது கலிஃபோா்னியாவை மேற்கோள்காட்டி கருத்து தெரிவித்ததால், ரிஷி சுனக்கின் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவின் ஈஸ்ட்போர்ன் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 5ம் திகதி கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினா்கள் மத்தியில் ரிஷி சுனக் பிரசாரம் செய்தார்.
அப்போது, ‘நீங்கள் இளம் பட்டதாரியாக இருந்தால், உங்களது வாழ்வை எப்படி அமைத்துக் கொள்வீர்கள்?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு ரிஷி சுனக் பதிலளிக்கையில், தான் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கடந்த 2004 முதல் 2006 வரை படித்த நாள்களை நினைவுகூர்ந்தார் அவர் கூறுகையில், ‘கலிஃபோர்னியாவின் சிலிகான் பள்ளத்தாக்கில் வாழ்ந்த நாள்கள் உத்வேகமும் அதிகாரமும் அளிப்பவை.
சுனக் தோ்தலில் வெற்றி பெற மாட்டார்
நான் இப்போது இளவயதில் இருந்திருந்தால், அங்கே சென்று ஏதாவது செய்ய விரும்புவேன் என்றார். மேலும், 10 நிமிஷங்களில் மூன்று முறை கலிஃபோர்னியா மாகாண பெயரை அவர் உச்சரித்தார். இது அவரது ஆதரவாளார்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்களுடன் அவர் தொடா்பில் இல்லாததையே இந்தக் கருத்து வெளிப்படுத்துவதாக மத்திய லண்டனில் உள்ள ரிஷி சுனக்கின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ‘தி டெய்லி டெலிகிராப்’ நாளிதழுக்கு அவர்கள் அளித்த பேட்டியில், ‘ரிஷி சுனக் பிரதமர் தோ்தலில் வெற்றி பெற மாட்டார் என மக்கள் பேசத் தொடங்கிவிட்டனர் என குறிப்பிட்டுள்ளனர்.