ஜூலை 14 வரையில் ஹரின் கைது செய்யப்பட மாட்டார்
எதிர்வரும் ஜூலை 14ம் திகதி வரையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, கைது செய்யப்பட மாட்டார் என சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றிற்கு, சட்ட மா அதிபர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் ஹரின் கைது செய்யப்பட மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தம்மை கைது செய்ய முயற்சிக்கப்படுவதாகவும் அதனை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி ஹரின் பெர்னாண்டோ சட்டத்தரணிகள் ஊடாக நேற்றைய தினம் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான பரிசீலனையின் போது சட்ட மா அதிபர் நீதிமன்றில் இந்த விடயத்தை இன்று குறிப்பிட்டுள்ளார்.
சட்ட மா அதிபரின் சார்பில் சிரேஸ்ட சொலிசுட்டர் ஜெனரல் பிரியந்த நாவான உச்ச நீதிமன்றில், ஹரின் எதிர்வரும் ஜூலை மாதம் 14ம் திகதி வரையில் கைது செய்யப்பட மாட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
