நாடகம் போடும் பசிலும் உதய கம்பன்பிலவும்! ஹரின் பெர்னாண்டோ
கெமராவுக்கு எதிரில் மாத்திரமே அமைச்சர்கள் பசில் ராஜபக்சவுக்கும், உதய கம்மன்பிலவும் வெளிப்படையாக மோதிக்கொள்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மோதிக்கொள்ளும் இவர்கள் கெமராக்கள் இல்லாத இடங்களில் கணவன், மனைவி போல் இருக்கின்றனர் என அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஹரின் பெர்னாண்டோ, அமைச்சர்கள் பசில் ராஜபக்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் கைளை பற்றிக்கொண்டு சிரித்து மகிழ்ச்சியுடன் உரையாடும் புகைப்படம் ஒன்றையும் காட்டியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ஹரின் பெர்னாண்டோ, அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அமைச்சர்கள் பசில் ராஜபக்சவும் உதய கம்மன்பிலவும் கைகளை பிடித்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை காண்பித்தேன்.
இவர்களின் பொய்களை மக்கள் காண்பதில்லையா?. இரண்டு பேரும் காதலர்கள் போல் இருக்கின்றனர். எமது ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் காலத்தில் இப்படி கைகளை பிடித்துக்கொண்டிருந்தால், வேறுவிதமான கதைகளை பேசி இருப்பார்கள்.
எனினும் இந்த கதை சிறந்தது. இதுவும் அப்படியான கதையா என்பது தெரியவில்லை. அப்படியான கதையாக இருக்காது என்றே நாங்கள் நினைக்கிறோம். ஆனால், இவர்கள் வெளியில் சண்டையிட்டு கொள்கின்றனர்.
விமல் வீரவங்ச போன்றவர்கள் சில பிடித்து வெளியில் அழைத்து வந்து உருவாக்கும் அணிகள் நாட்டை அழித்த அணிகள்.
கோட்டாபய ராஜபக்சவை விமல் வீரவங்ச, லீக் வான்யூ என விமல் வீரவங்ச கூறினார். நான் அப்படி கூறவில்லை என்று தற்போது கூறி மக்களை ஏமாற்ற முடியாது.
இவர்கள் எதிரணியை உருவாக்க முயற்சித்தாலும் அவரது வெறும் நாடகம் மாத்திரமே.
சவாலுக்கு மத்தியில் கட்சி பேதமின்றி ஒரு நோக்கத்திற்காக அணித்திரள வேண்டுமாயின் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு, அரசாங்கத்திற்கு எதிரான உண்மையான சக்திகளுக்கு அழைப்பு விடுக்கின்றேன் எனவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri