ரஞ்சனுக்காக நாடாளுமன்ற உறுப்புரிமையை தியாகம் செய்ய தயாராகும் ஹரீன்
தற்போது சிறையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு(Ranjan Ramanayakke) தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ(Harin Fernando) தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தயாராக இருந்தால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய நான் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வத்தளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நான் இன்று ஒரு விடயத்தை கூறுகின்றேன். கோட்டாபய ராஜபக்சவுக்கு முடிந்தால் அதை செய்யலாம். எனக்கு இருப்பது தேசிய பட்டியல் உறுப்புரிமை. முடிந்தால் ரஞ்சன் ராமநாயக்கவை நீங்கள் விடுதலை செய்யுங்கள். நான் அந்த இடத்தை விட்டு செல்கின்றேன்.
அப்படி ஒரு வேண்டுகோளை முன்வைக்க காரணம் எனக்கு அரசியல் உறுப்புரிமை தேவை இல்லை. நான் இதற்கு முன்னரும் அரசியல் உறுப்புரிமையை விட்டு சென்றுள்ளேன்.
ஆனால் தேசிய பட்டியல் உறுப்புரிமைவிட்டு சென்றால் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு அல்லது கட்சியின் பொதுசெயலாளருக்கு அந்த பதவியை வேறொருவருக்கு வழங்க முடியும். ரஞ்சன் ராமநாயக்க அதற்கு தகுதியற்றவர் என இலங்கையில் யாருமே கூற மாட்டார்கள்.
அதனால் பாதைக்கு இறங்கி போராட எனக்கு தெரியும். ஆனால் ரஞ்சன் நாடாளுமன்றில் கட்டாயம் இருக்க வேண்டும். ஏனென்றால் தவறு செய்யாமல் ஒருவர் சிறைக்கு செல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
நான் பொய்யாக கருப்பு துணியை அணிந்துகொள்ளவில்லை. நந்த சேன கோட்டாபய அவர்களே இதோ, உங்களுக்கு தலைவலியாய் இருக்கும் நான் விலகிக்கொள்கின்றேன். முடிந்தால் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு முழு சுதந்திரத்தை பெற்றுக்கொடுங்கள். அவரை அழைத்து சென்று செய்யவேண்டிய அடுத்த கட்ட வேலைகளை நாம் செய்துக்கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri