ஜனாதிபதி ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஹரின், மனுஷ : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும், அதனால் அமைச்சர் பதவிகளையும் இழந்த ஹரின் பெர்னாண்டோவையும், மனுஷ நாணயக்காரவையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது ஆலோசகர்களாக நியமித்துள்ளமை தேர்தல் விதிமுறைகளுக்கு முரணான விடயம் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க(Anura Dissanayaka) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தேர்தல் காலத்தின்போது புதிய நியமனங்களுக்குத் தடை விதித்து தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவை ஜனாதிபதி மீறியுள்ளார்.
தேர்தல் பரப்புரை
ஹரின், மனுஷ முன்னைய அமைச்சுகளின் ஆலோசகர்களாக அவர்களை ஜனாதிபதி நியமித்துள்ளார். இதன் மூலம் அவர்கள் அந்த அமைச்சுகளின் நடவடிக்கைகளில் தலையிடலாம், ஊதியம் பெறலாம், வாகனங்களைப் பெறலாம்.
ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் அனைவரும் அரசின் நிதியைப் பயன்படுத்துகின்றனர்.
அகிலவிராஜ் உள்ளிட்ட பலருக்கு ஆலோசகர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தனது தேர்தல் பரப்புரைக்காக அரச வளங்களைத் துஷ்பிரயோகம் செய்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
