உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள ஹரின்
உயிரித்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக தன்னை கைது செய்யும் தயார் நிலைகள் இருப்பதால், அவ்வாறு தன்னை கைது செய்வதை தடுத்து நிறுத்தி உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இன்று உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவில் பிரதிவாதிகளாக குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பணிப்பாளர், பொலிஸ் மா அதிபர், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தற்போது கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.