சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவேன்! ஹரீன் பெர்ணான்டோ அறிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கட்சியில் இருந்து விலக தீர்மானித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் விரைவாக அரசாங்கமொன்றை அமைக்கப்பட வேண்டியதன் தேவை காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், இதனை ஐக்கிய மக்கள் சக்தி தாமதப்படுத்துமே ஆனால் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்தில் அமர்வேன் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவு வழங்குவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தலில் மக்கள் ஆணையுடன் ஆட்சியைக் கைப்பற்றுவது சிறந்தது என்ற போதிலும் அதற்கான நேரம் இதுவல்ல எனவும் ஹரீன் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எவ்வளவு தாமதப்படுத்துகின்றோமே அந்த அளவிற்கு நாடு பாதிக்கப்படும் எனவும் ஊடகமொன்றுக்கு ஹரீன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam