ஐ.மக்கள் சக்தியின் வத்தளை அமைப்பாளராக ஹரின் பெர்னாண்டோ
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, ஐக்கிய மக்கள் சக்தியின் வத்தளை தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நியமனம் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
இதனடிப்படையில், ஹரின் பெர்னாண்டோ தான் பிரதிநிதித்துவப்படுத்தி வரும் பதுளை மாவட்டத்தில் இருந்து தான் பிறந்து வாழும் கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
ஹரின் பெர்னாண்டோவின் மனைவியின் தந்தையான ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வின்சன் டயஸின் அரசியல் அடிப்படை காரணமாக ஹரின் பதுளை மாவட்டத்திற்கு சென்றார்.
அத்துடன் பதுளை மாவட்டத்தில் அவருக்கு இருந்த புகழ் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஹரின் பெர்னாண்டோ கடந்த பொதுத் தேர்தலில் அந்த மாவட்டத்தில் போட்டியிடவில்லை என்பதுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.