ஹரின் பெர்னாண்டோவுக்கு பிணையில் செல்ல அனுமதி
புதிய இணைப்பு
தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காகக் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பதுளை பொலிஸாரால் நேற்று (20) காலை செய்து செய்யப்பட்ட ஹரின் பெர்னாண்டோ, விசாரணைகளின் பின்ன பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
இதன்போது 5 இலட்சம் ரூபா பெறுமதியிலான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அவருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
செய்தி - ராகேஷ்
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவை சற்று நேரத்திற்கு முன்னர் பதுளை பொலிஸார் கைது செய்தனர்.
அமைதி தேர்தல் காலத்தில் பதுளை நகரில் இடம்பெற்ற சட்டவிரோத பேரணி தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 11ஆம் திகதி முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் குழுவுடன் இணைந்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பட்டாசு கொளுத்திக் கொண்டிருந்த வேளையில் பதுளை பொலிஸார் அவர்களை அங்கிருந்து கலைத்துள்ளனர்.
பதற்றமான சூழல்
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற உரையாடல் காரணமாக அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதன்போது முன்னாள் அமைச்சர், தான் அணிந்திருந்த ஆடையை கழட்டிவிட்டு குழப்பம் ஏற்படுத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஹரின் பெர்னாண்டோவிடம் தற்போது வாக்குமூலம் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
