ஹரினின் முடிவை பின்பற்றப்போகும் சஜித் கட்சியின் மேலும் சிலர்!
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படப் போவதாக அறிவித்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார உட்பட்டவர்களும் ஹரினை பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இது நகர்வு உறுதிப்படுத்தப்படவில்லை.
கட்சியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக ஹரின் பெர்ணான்டோ, எந்தக் கட்சிக்கும் ஆதரவளிக்காமல் நாடாளுமன்றத்தில் சுதந்திரமாகச் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் அமைக்கப்படவுள்ள புதிய இடைக்கால அரசாங்கத்திற்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
தற்போதைய நிலையில் இடைக்கால நிர்வாகத்தை பொறுப்பேற்க முடியும் என்றபோதிலும், சஜித் பிரேமதாச அதற்கான முடிவை எடுக்காமையே ஹரினின் முடிவுக்கான காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இது, சஜித் பிரேமதாச தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியில் பெரும் பிளவை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
