ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் எளிமையான பிரதியை கோரும் ஹரின்
நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் எளிமையான பிரதி ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) நாடாளுமன்றத்தில் இன்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆணைக்குழுவின் அறிக்கை 87 பாகங்களாக நாடாளுமன்றத்திற்கு கிடைத்துள்ளதாகவும் அவற்றின் மொத்த பக்கங்கள் 69 ஆயிரத்து 800 எனவும் அதனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் எடுத்துச் செல்ல முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அறிக்கையின் எளிமையான பிரதி ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழங்கினால், அதனை அவர்கள் பயன்படுத்த இலகுவாக இருக்கும் எனவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 2 மணி நேரம் முன்
லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட் News Lankasri
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri