ஹரக் கட்டா வெளியிடப்போகும் இலஞ்ச பட்டியல்! கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள்
ஹரக் கட்டா, என்றும் அழைக்கப்படும் நதுன் சிந்தக, விரைவில் தம்மிடம் இருந்து இலஞ்சம் பெற்றவர்களின் பெயர் பட்டியலை இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் முறைப்பாட்டை சமர்ப்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது சட்டத்தரணிகள் மூலம் குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
பல பொலிஸ் அதிகாரிகளின் பெயர்கள் இங்கு வெளியிடப்படும் என்றும், நதுன் சிந்தக தப்பிச் சென்றது தொடர்பான விசாரணைகளின் போது பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் சில அதிகாரிகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
விரிவான விசாரணை
இந்நிலையில் சிலர் பணம், கணினிகள் மற்றும் ஆப்பில் கையடக்க தொலைபேசிகளை இலஞ்சமாகப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளதாக மேலும் கூறப்பட்டுள்ளது.

பல்வேறு சந்தர்ப்பங்களில் சுமார் ஏழு நபர்கள் பணம் மற்றும் பல்வேறு இலஞ்சங்களைப் பெற்றதற்கான ஆதாரங்கள் தெரியவந்துள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தக் கோருவதாகவும் சட்டத்தரணிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
எலிமினேஷனுக்கு பிறகு அழுத முகத்துடன் வீட்டிற்கு வந்த பிக்பாஸ் 9 பிரவீன்... அடுத்து நடந்த விஷயம், வீடியோ, இதோ Cineulagam
சூர்யா நிலைமையை பயன்படுத்தி சுந்தரவல்லி போட்ட கிரிமினல் பிளான், நந்தினி அதிரடி... மூன்று முடிச்சு புரொமோ Cineulagam
முத்து சொல்ல சொல்ல பதற்றத்தின் உச்சத்தில் ரோஹினி, அப்படி என்ன தெரிந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam