சிறையில் மின்விசிறி கேட்ட போதைப் பொருள் தடுப்பு கைதி
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான 'ஹரக் கட்டா' (Harak Kata) என்ற நந்துன் சிந்தக விக்கிரமரத்ன தனக்கு சிறையில் மின்விசிறி வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
தங்காலை பழைய சிறைச்சாலையில் இருந்து கொழும்பு மேல் நீதிமன்றத்தில் (Colombo High Court) அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த கோரிக்கை அவரின் சட்டத்தரணியின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, நந்துன் சிந்தகவை சந்திக்க சட்டத்தரணிகள் மற்றும் உறவினர்கள் வரும்போது, பொலிஸ் அதிகாரிகள் அவர்களுக்கு அருகில் இருந்து கலந்துரையாடல்களை பதிவு செய்துள்ளதாக அவரின் சட்டத்தரணியால் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
விடுக்கப்பட்ட கோரிக்கைகள்
இது அவர்களுக்கிடையிலான சுதந்திரமான கருத்து பரிமாற்றத்திற்கு இடையூறாக இருப்பதாகவும் நியாயமான விசாரணைக்கான விதிமுறைகளை மீறுவதாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் எடுத்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த, நந்துன் சிந்தக மீதான விசாரணைகளை பாதுகாப்பு கமராக்கள் (CCTV) ஊடாக மாத்திரம் மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்துள்ளார்.
இதனையடுத்து, இந்நாட்களில் வெயில் மிகவும் அதிகமாக இருப்பதால் நந்துன் சிந்தகவுக்கு சிறையில் ஒரு மின்விசிறியை வழங்குமாறு அவரின் சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.
நீதிபதியின் பதில்
மேலும், சிறைச்சாலையில் உள்ள மின் விளக்குகள் தொடர்பாகவும் குற்றம் சாட்டிய சட்டத்தரணி, சிந்தகவுக்கு புத்தகம் மற்றும் செய்தித்தாள்களை வழங்குமாறும் கோரியுள்ளார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி குறித்த கோரிக்கைகளை எழுத்து மூலமாக சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |