சினிமா பாணியில் முன்னெடுக்கப்படவிருந்த கொலை முயற்சி முறியடிப்பு
சினிமா பாணியில் முன்னெடுக்கப்படவிருந்த கொலை முயற்சியொன்றை பொலிஸார் முறியடித்துள்ளனர்.
இலங்கையின் முக்கிய பாதாள உலகக் குழு தலைவர்களில் ஓருவரான ஹரக் கட்டா என்பவரை சினிமா பாணியில் படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த படுகொலை முயற்சியுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை மஹரகம பிரதேசத்தில் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
கொலை முயற்சி
ஊடகவியலாளர் என்ற போர்வையில் ஹரக் கட்டாவை படுகொலை செய்ய குறித்த நபர் திட்டமிட்டிருந்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரிடமிருந்து எரிக்கப்பட்ட வீடியோ கமரா ஒன்று மற்றும் ஆயுதமொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
தாழ்நில அபிவிருத்திச் சபையின் பணியாளர் ஓருவரே இவ்வாறு ஹரக் கட்டா கொலை முயற்சியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri
