தமிழ்வின் சொந்தங்களுக்கு எமது தைத்திருநாள் வாழ்த்துக்கள்
நன்றியை பறைசாற்றும் மனித மேன்மைக்கு எடுத்துக் காட்டான தைப் பொங்கல் திருநாள் இன்று மலர்ந்திருக்கின்றது.
உழவர் திருநாளாம் இன்று உலகளாவிய ரீதியில் உள்ள அனைத்து தமிழ் இந்து மக்களும் சூரியன் உதிக்கும் வேளையில் பொங்கலிட்டு தமது நன்றியை வெளிப்படுத்தி இந்த தைத் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.
தை முதலாம் திகதி தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழாவாக இது கருதப்படுகின்றது.
அந்தவகையில் இன்று தமிழர் திருநாளாம் தைத்திருநாளைக் கொண்டாடும் உலகளவில் பரந்து வாழும் எமது தமிழ்வின் சொந்தங்களுக்கு தைத் திருநாள் வாழ்த்துக்களை கூறுவதில் பெருமகிழ்வடைகின்றோம்.
புதிதாக பிறந்திருக்கும் இந்த தை மாதம் இருளை அகற்றி அனைவரது வாழ்விலும் ஒளியை கொண்டு வந்து சேர்க்கவும் மலர்ந்திருக்கும் இந்த நாள் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்க்கவும் தமிழ்வின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
குளிர்காலத்தில் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுறீங்களா? இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சித்து பாருங்க Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam