சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடையாதோருக்கு மகிழ்ச்சியான தகவல்
கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சை வரை கல்வி கற்ற போதிலும் பரீட்சையில் சித்தியடையாத ஒரு லட்சம் பேருக்கு அரசாங்க வேலைவாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச பணியில் சேர்த்துக் கொள்ளும் வேலைத்திட்டம் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இதுவரையில் 45000 பேர் அரச பணியில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாக, இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2015 – 2019 ஆண்டு காலப்பகுதியினுள் 22,145 பேர் முழுமையான அரச சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதிவியேற்ற பின்னர் அபிவிருத்தி அதிகாரிகள் பதவிக்கு மாத்திரம் 60,000 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த 60,000 பேருக்கு வழங்கப்பட்ட பயிற்சி காலம் நிறைவடைந்து அவர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக சாதாரண தரம் கற்ற அல்லது சதாரண தர பரீட்சையில் சித்தியடையாத ஒரு லட்சம் பேரை அரச பணியில் இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதில் பயிற்சிகளை நிறைவு செய்த 45000 பேர் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
