ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கை செல்வோருக்கு முக்கிய தகவல்
ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோர், திரவ தன்மை கொண்ட பொருட்களை கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு திரையிடல் முறையில் புதிய மாற்றம் மேற்கொண்டு வருவதால் திரவ கட்டுப்பாட்டை நீக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, பயணிகள், முன்னர் கடுமையாக பின்பற்ற வேண்டியிருந்த 100 மில்லிலீட்டர் திரவக் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படவுள்ளது.
CT ஸ்கேனர் கருவிகள்
புதிய CT ஸ்கேனர் கருவிகள், வெடிபொருள் கண்டறிதல் திறன் கொண்டவையாகும். இவை இரண்டு லீட்டர் வரை உள்ள திரவங்களை ஸ்கேன் செய்யும் திறனைக் கொண்டுள்ளன.
இதன் மூலம், ஷெம்போ, பற்பசை உள்ளிட்ட பொருட்களை சிறிய போத்தல்களில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் போகும்.
புதிய விதிகள்
பெர்லின், ரோம், ஆம்ஸ்டர்டாம், மிலன் போன்ற சில முக்கிய விமான நிலையங்களில் இந்த மேம்பட்ட ஸ்கேனர்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன,
எனவே இங்கு விரைவில் புதிய விதிகள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியமும் அதன் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பும் இணைந்து தொழில்நுட்ப சோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாக உறுதிபடுத்தியுள்ளது.





ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri
