நண்பர்களின் ஒன்றுகூடலில் கலந்து விட்டு வீடு திரும்பிய இளைஞனுக்கு நேர்ந்த கதி!
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் மாவடிவேம்பு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனொருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் செங்கலடியில் வசிக்கும் இராமகிருஷ்ணன் மயூரன் (வயது 27) என்பவரே பலியாகியுள்ளார்.
குறித்த இளைஞன் சந்திவெளியிலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கும் போது மாவடிவேம்பு பகுதியில் வைத்து எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் மோதுண்டதால் படுகாயங்களுக்குள்ளான நிலையில் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
இதன்போது மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து உடற்கூராய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நண்பர்களின் ஒன்றுகூடலில் கலந்து விட்டு திரும்பும் வழியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
70வது Filmfare விருதுகள்: விக்ரம். கார்த்தி முதல் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் வரை விருதுகளை வென்ற பிரபலங்களின் பட்டியல் இதோ Cineulagam