கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான காசநோய் மருந்துகள் கையளிப்பு - இந்திய அரசு வழங்கிய உதவி
இலங்கையின் சுகாதார அமைச்சில் இன்று நடைபெற்ற நிகழ்வில், இலங்கை அரசாங்கத்திடம் அத்தியாவசிய காசநோய் (TB) எதிர்ப்பு மருந்துகளை இந்திய அரசாங்கம் கையளித்துள்ளது.
இந்த நடவடிக்கையில், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கையின் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் இணைந்துக் கொண்டுள்ளனர்.
அத்துடன், பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனிவும் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அத்தியாவசிய காசநோய் எதிர்ப்பு மருந்துகள் போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இவ்வாறு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த மருந்துகள் இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சின் ஆதரவுடன் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5.2 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள்
இதன்போது,5.2 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 3 தொன் எடையுள்ள அத்தியாவசிய காசநோய் எதிர்ப்பு மருந்துகளும், 15 இலட்சத்திற்கும் அதிகமான மாத்திரைகளும் வழங்கப்பட்டுள்ளன. காசநோய்க்கு சிகிச்சையளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய முதன்மை நிலை மருந்துகளும் இதில் அடங்குகின்றன.

இதன் மூலம் இலங்கையில் காசநோயாளிகளுக்கான சிகிச்சை தொடர்ச்சியாகவும் தடையின்றியும் கிடைப்பதை உறுதி செய்ய உதவும். இந்த உதவியானது, இலங்கையின் பொது சுகாதாரத் தேவைகளுக்கு இந்தியா உரிய நேரத்தில் பதிலளித்து வருவதற்கான மற்றுமொரு எடுத்துக்காட்டாகும்.
கடந்த 2026 ஆகஸ்ட் மாதத்தில், இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நாட்டின் முயற்சிகளுக்கு ஆதரவாக இந்தியா 500 லீற்றர் தொழில்நுட்ப மலத்தியானையும் (Technical Malathion)வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan