மன்னாரில் குழாய் நீர் கிணறுகள் மக்களின் பாவனைக்கு கையளிப்பு
ஞானம் அறக்கட்டளையின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்டம் (Mannar) முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எஸ்.பி பொற்கேணி கிராமத்தில் அமைக்கப்பட்ட மூன்று குழாய் நீர் கிணறுகள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளன.
குறித்த குழாய் நீர் கிணறுகள் இன்றைய தினம் புதன்கிழமை (17) காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த கிராமத்து மக்களின் குடிநீர் தேவையை இதுவரை எந்த அதிகாரிகளும் அரசியல் பிரதிநிதிகளும் தீர்த்து வைக்காத நிலையில் ஞானம் அறக்கட்டளை அவர்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுத்துள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர்
மேலும், இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன், மத தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஞானம் அறக்கட்டளை பணியாளர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |