மத்திய கலாசார நிதியத்தின் வரைவு விதிகள் பிரதமரிடம் கையளிப்பு

Government Budjet Mahindarajapaksa
By Kanamirtha Mar 03, 2022 03:10 PM GMT
Report

1980 ஆம் ஆண்டு 57 ஆம் இலக்க மத்திய கலாசார நிதியச் சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள வரைவு விதிகள் குழுவின் தலைவர் ஜி.எல்.டபிள்யூ.சமரசிங்க உள்ளிட்ட குழு உறுப்பினர்களினால் நேற்று (02) அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது.

புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மகிந்த ராஜபக்சவின் பணிப்புரையின் பேரில் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவினால் 2020 செப்டெம்பர் 16 ஆம் திகதி குறித்த குழு நியமிக்கப்பட்டது.

கடந்த அரசாங்கத்தின் போது குறித்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் பாரியளவில் நிதி துஷ்பிரயோகம் இடம்பெற்றமை போன்ற நிதி மோசடிகள் மேலும் இடம்பெறுவதனை தடுப்பதற்கு இந்த விதிகளை அறிமுகப்படுத்துவது மிகவும் அவசியமானது என பிரதமர் சுட்டிக்காட்டினார்.

விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் விருப்பத்திற்கேற்ப பணம் செலவழிப்பதை மட்டுப்படுத்துவதற்கான முறைமையொன்றை உருவாக்குவது நாட்டுக்கு நன்மை பயக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

பிரதமரின் ஆலோசகர் (பொது உறவுகள்) ஜி.எல்.டபிள்யூ.சமரசிங்க இக்குழுவின் தலைவராக விளங்குவதுடன், புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் விஜித நந்த குமார, சட்டத்தரணி கணேஷ் தர்மவர்தன மற்றும் மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர் (நிர்வாகம் மற்றும் மனித அபிவிருத்தி) டபிள்யூ. தர்மதாச ஆகியோர் இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாகக் காணப்படுகின்றனர்.

மத்திய கலாச்சார நிதியம் ஸ்தாபிக்கப்பட்டது முதல் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் மற்றும் அதன் கீழ் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மற்றும் அதற்கு இணையாகச் செயல்படும் தொல்பொருள் திணைக்களத்தின் தொடர்புடைய சட்டங்கள் மற்றும் விதிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த வரைவு விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

தொல்பொருள் ஆணையாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க, தொல்பொருள் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திஸாநாயக்க, உலக பாரம்பரிய சர்வதேச ஆலோசகர் காமினி விஜேசூரிய, முன்னாள் தொல்பொருள் ஆணையாளர் நிமல் பெரேரா மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட உதவிச் செயலாளர் நந்தனி பெர்னாண்டோ ஆகியோர் இதற்கு விசேட ஒத்துழைப்பு நல்கியுள்ளனர்.

நிதி மற்றும் பிற விடயங்கள் குறித்துச் செயற்படும்போது அதன் பணிப்பாளர் நாயகம் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிக்கு உதவியாகப் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரையின் பேரில் தலைமை நிர்வாக அதிகாரியினால் ஒரு நிபுணர் குழு நியமிக்கப்படும்.

அது அவ்வப்போது பரிசீலனை செய்யப்பட்டு, திருத்தங்கள் தேவைப்பட்டால் அவ்வாறு செய்வதற்கான தலைமை நிர்வாக அதிகாரிக்கான அதிகாரம் உள்ளிட்ட 16 முக்கிய விதிகள் இந்த வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, குழுத் தலைவர் பிரதமரின் ஆலோசகர் (பொது உறவுகள்) ஜி.எல்.டபிள்யூ.சமரசிங்க உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US