மன்னார் மறைமாவட்ட ஆயரிடம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆடை கையளிப்பு
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிறிஸ்தவ ஆடை இன்றைய தினம் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மனுவேல் பெர்னாண்டோ ஆண்டகையிடம் வழங்கி வைக்கப்பட்டது.
உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆடை மற்றும் கிரீடத்தை மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்ற இலங்கை சுதந்திரக்கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் சாமிந்த பிருதி விராஜ் வசலாவினால் வழங்கி வைக்கப்பட்டது.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களின் அறிவுறுத்தல்கள் மற்றும் அறிவுரைகளின் பேரில், மறைமாவட்ட ஆயர்களின் ஆடை மற்றும் கிரீடம் ஆகியவை வழங்கி வைக்கப்பட்டது.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்ட நிலையில் இலங்கையில் உள்ள மறைமாவட்ட ஆயர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மனுவேல் பெர்னாண்டோ ஆண்டகையிடம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan