பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடுகளை பெற்றுக்கொள்வதில் மாணவர்கள் வீழ்ச்சி
2020/2021 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான கையேட்டினை மாணவர்களுக்கு வழங்க யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் ஏற்பாடு செய்திருந்த போதிலும் வவுனியா வடக்கு மாணவர்கள் குறைந்தளவிலேயே பெற்றுள்ளதாக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி ரி. மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் அப்பிரதேச மாணவர்கள் வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள வவுனியா வளாகத்திலும் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள இராமச்சந்திராஸ் புத்தக நிலையத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே மாணவர்கள் தங்களது பாடசாலை அடையாள அட்டை அல்லது தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து குறித்த கையேடுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ,குறித்த பிரிவுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான இணையவழி கருத்தரங்கொன்றும் வவுனியா வளாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த கருத்தரங்கு 04.06.2021 காலை 9 மணி முதல் ZOOM ஊடாக இடம்பெறும். இதற்கான முகவரி: Meeting ID: 670 192 6578 கடவுச்சொல்: UAH@900Am

கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan