முகமாலை பகுதியிலிருந்து கைக்குண்டொன்று மீட்பு
கிளிநொச்சி - முகமாலையில் உள்ள கோவானக்குளத்தில் இருந்து கைக்குண்டொன்று பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளது.
குறித்த குளத்தினை அபிவிருத்திக்காக பார்வையிடச் சென்ற கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்னவின் இணைப்பு செயலாளர் சுமுது தலைமையிலான குழுவினரால் குறித்த கைக்குண்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த பகுதி ஆபத்தான பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அருகில் உள்ள இராணுவ சோதனைச்சாவடியில் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து படையினரின் உதவியுடன் கண்ணிவெடி அகற்றும் மனிதநேய பணியாளர்களால் குறித்த கைக்குண்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளது.








தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
