திருக்கோவிலில் கைக்குண்டு ஒன்று மீட்பு(Photo)
அம்பாறை-திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உமரி பிரதேசத்திலுள்ள தனியார் காணி ஒன்றிலிருந்து கைக்குண்டு ஒன்றை இன்று (09.04.2023) மீட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றிற்கு சொந்தமான காணியில், சம்பவதினமான இன்று விடுதி காவலாளி காணியில் வளர்ந்துள்ள புற்களை வெட்டி துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார்.
மேலதிக விசாரணை

இதன்போது நிலத்தில் புதையுண்டிருந்த கைக்குண்டு ஒன்றை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், விசேட அதிரடிப்படை குண்டு செயலிழக்கும் பிரிவினரை வரவழைத்து குண்டை செயலிழக்கச் செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan