மீன்பிடி வலையில் சிக்கிய கைக்குண்டு மீட்பு
ஹொரணை அருகே அங்குருவாத்தோட்ட பிரதேசத்தில் மீன்பிடி வலையில் சிக்கியிருந்த நிலையில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
அங்குருவாத்தோட்ட - கன்னந்துடாவ பிரதேசத்தில் பின்வெல்ல கால்வாயில் சிலர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே வலையில் கைக்குண்டு சிக்கியுள்ளது.
பொலிஸார் விசாரணை
பின்வெல்ல பிரதேசத்தில் வயல்களுக்கு நீர் வழங்கும் கால்வாயில் படகொட கன்னந்துடாவ வீதிக்கு அருகில் உள்ள நீர் குழியில் மூன்று இளைஞர்கள் மீன்பிடிப்பதற்காக வலை வீசிக்கொண்டிருந்த போதே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த வெடிகுண்டு யாரோ ஒருவரால் கால்வாய்க்குள் வீசப்பட்டிருக்கலாம் என பொலிஸார் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் விசாரணைகளுக்குப் பின் பொலிஸாரினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அங்குருவாத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |