அமெரிக்காவின் கடுமையான வார்த்தை பிரயோகம்.. ஈரான் கொடுத்துள்ள பதிலடி
மோசமான வார்த்தைகளுக்கு நாங்கள் அதே மோசமான வார்த்தைகளால் பதிலடி கொடுப்பதில்லை, மாறாக எங்களது செயலால் பதிலடி கொடுக்கிறோம் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி இவ்வாறு கூறியுள்ளார்.
இழிவான மொழி
மேலும், "நாகரிகமும் தைரியமும் கொண்ட ஈரான் தேசத்தை இழிவான மொழியில் பேசுவது அதன் பெருமையைக் குறைத்துவிடாது.

ஈரானியர்கள் தங்களது நாகரிகம், பண்பாடு மற்றும் வலுவான தார்மீக விழுமியங்களுக்காக அறியப்படுபவர்கள்.
வார்த்தை ஆபாசத்திற்கு நாங்கள் அதே ஆபாச வார்த்தைகளால் பதிலடி கொடுப்பதில்லை, மாறாக அச்சமின்றியும் மிகுந்த வீரியத்துடனும் எங்களது செயலால் பதிலடி கொடுக்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.