புதுக்குடியிருப்பில் நேற்றிரவு பரபரப்பு.. இளைஞர்களை பொலிஸார் கடுமையாக தாக்கியதாக தகவல்
புதுக்குடியிருப்பு பகுதியில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்களை காலால் உதைத்து விழுத்தி பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் இச்சம்பவம் தொடர்பில் தற்போது காணொளி ஒன்று பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த காணொளியில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் உள்ளனர்.
கடுமையான தாக்குதல்கள்..
மேலும் குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் உறுதிபடுத்தியுள்ளார்.

அதேநேரம், சம்பவத்தின் போது பொலிஸார் மதுபோதையில் குறித்த இளைஞர்களை தாக்கியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இருப்பினும், இதுவரை பொலிஸில் முறைப்பாடுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும் தாக்கியதாக கூறப்படும் அதிகாரிகள் இளைஞர்களின் வாகனங்களை வழிமறித்த போது நிறுத்தாமையினாலேயே தாக்கினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri