கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமாக பெண் கொலை - பொலிஸார் தீவிர விசாரணை
ஹம்பாந்தோட்டை பகுதியில் கடையொன்றினை நடத்தி வந்த வயோதிப பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை பகுதியில் கடையொன்றினை நடத்தி வந்த, 72 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இந்த சம்பவம் இன்று (11) காலை சுமார் 6 மணியளவில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த பெண்மணியின் அலறல் சத்தத்தை கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி மக்களும் பொலிஸாரும், படுகாயமடைந்த அப்பெண்ணை ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் சேர்க்க உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தாக்குதல் நடந்த நேரத்தில், கடைக்கு பின்னால் வாடகைக்குத் தங்கியிருந்த ஒரு தனியார் நிறுவன ஊழியர், கடைக்குள் இருந்து வந்த அலறல் சத்தத்தை கேட்டு உள்ளே சென்று போது, கடைக்குள் இருந்து ஒருவர் ஓடிச்செல்வதை அவதானித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று ஏற்கனவே விசாரணையை தொடங்கியுள்ளது.