பணயக்கைதிகளின் முதல் காணொளியை வெளியிட்ட ஹமாஸ்
பணயக்கைதியாக உள்ள ஒரு பெண்ணின் முதல் காணொளியை ஹமாஸின் அல்-காஸம் பிரிகேட்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்திய பிறகு அவர்கள் வெளியிட்ட முதல் பணயக்கைதி தொடர்பான காணொளி இதுவாகும்.
இதற்கமைய காசாவில் 199 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், குறித்த காணொளியில், ஒரு இளம் பெண், தனது பெயர் மாயா ஷெம் என்றும், தனக்கு 21 வயது என்றும், இஸ்ரேலில் உள்ள ஷோஹாம் நகரைச் சேர்ந்தவர் என்றும் கூறுகின்றார்.
விடுவிக்குமாறு கூறும் காணொளி
இஸ்ரேலில் நடந்த ஒரு விருந்தில் ஹமாஸால் பணயக்கைதியாகப் பிடிக்கப்பட்டதாகவும், தன்னை விடுவிக்குமாறும் அவர் கூறும் காட்சி காணொளியில் இடம்பெற்றுள்ளது.
மேலும், ஹமாஸால் மாயா கடத்தப்பட்டதை உறுதிப்படுத்திய இஸ்ரேல் பாதுகாப்புப் படை அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
#BREAKING: Hamas releases first video of an injured Israeli hostage, clearly being held in despicable conditions despite her visible injuries from the terrorists. pic.twitter.com/45e1pgFGRh
— Israel War Room (@IsraelWarRoom) October 16, 2023