வலுக்கும் போர்நிறுத்த திட்டம்! தனது பதிலை கூறிய ஹமாஸ்
ஏனைய பலஸ்தீன குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துவிட்டதாகவும், இப்போது போர்நிறுத்த திட்டத்திற்கான பதிலை அளித்துள்ளதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
டெலிக்ராமில் பகிரப்பட்ட ஒரு செய்தியிலேயே இது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
இதில், ஹமாஸ் தனது பதில் நேர்மறையானது என்றும், திட்டத்தின் முக்கிய யோசனைகளுடன் உடன்படுவதாகவும் கூறியுள்ளது.
மத்தியஸ்தர்கள்
அத்துடன், திட்டத்தை படிப்படியாக எவ்வாறு செயற்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி விவாதிக்க உடனடியாக புதிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்கத் தயாராக இருப்பதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
மேலும், ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதில் ஹமாஸ் தீவிரமாக இருப்பதாகவும், விரைவாக முன்னேற மத்தியஸ்தர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
