இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியான ஹமாஸ் இராணுவ தளபதி
இஸ்ரேல்(Israel) நடத்திய திடீர் தாக்குதலில் ஹமாஸ் இராணுவ தளபதி முகமது தைப் படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தகவல் வெளியிட்டுள்ளது.
இவர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதானமாக செயல்பட்டவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
பாரிய தாக்குதல்கள்
கடந்த ஜூலை 13ஆம் திகதி தெற்கு காசாவில் முகமது தைப் வசித்து வந்த கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் பாரிய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
குறித்த தாக்குதலில் முகமது தைப் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்த செய்தியை இஸ்ரேல் பாதுகாப்பு படையானது தற்போது உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவரான இஸ்மாயில் ஹனியி (வயது 62) நேற்று கொல்லப்பட்டார்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வீட்டில் இஸ்மாயில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது படுகொலைக்கு இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
You may like this