ஹமாஸ் அமைப்பின் தலைவர் வெற்றிடத்திற்கு புதியவர் நியமனம்
இஸ்மாயில் ஹனியேவின் மரணத்திற்குப் பிறகு, யாஹ்யா சின்வார் (Yahya Sinwar) ஹமாஸ் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யாஹ்யா சின்வார் ஹமாஸ் ஆயுதக்குழுவின் காசா முனை பிரிவிற்கு மட்டும் தலைவராக இருந்து வந்த நிலையில் தற்போது ஒட்டுமொத்த ஹமாஸ் அமைப்பிற்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
போர் நிறுத்தம்
இஸ்ரேல் மீதான ஒக்டோபர் 7ஆம் திகதி தாக்குதலுக்கு திட்டமிட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவினரில் யாஹ்யா சின்வாரும் முக்கிய நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு தலைவரின் மரணத்திற்குப் பிறகு, துணைத் தலைவர் அவரது இடத்தைப் பெறுகிறார், ஆனால் ஹமாஸின் துணைத் தலைவராக இருந்த சலே அல்-அரூரி இந்த ஆண்டு ஜனவரியில் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் ஹமாஸின் இராண்டாவது தலைவர் சலே அல்-அரூரியை ட்ரோன் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவம் கொன்றது.
இதனையடுத்து ஹமாஸின் அரசியல் பிரிவில் முதல் இரு இடங்களும் வெற்றிடமாகின.
தற்போது, காசாவில் இஸ்ரேலின் போரின் நிலையை சின்வாரை விட நன்கு புரிந்து கொள்ளக்கூடிய தலைவர் ஹமாஸில் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பணயக்கைதிகள் விடுதலை மற்றும் போர் நிறுத்தம் தொடர்பான முக்கிய முடிவுகளை இனி சின்வார் மட்டுமே எடுப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |