அழுத்தி கதைப்பதால் தீர்வு கிடைக்காது! கோடீஸ்வரன் எம்.பிக்கு ஹக்கீம் பதில்
கல்முனை பிரதேச செயலக விவகாரத்தினை பலாத்காரமாக நாடாளுமன்றத்தில் அழுத்தி கதைப்பதன் மூலம் மாத்திரம் தீர்த்துக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கல்முனை வடக்கு பிரதேச செயலகம்
“கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக தமிழ் அரசுக்கட்சி உறுப்பினர்களும் பலரும் இதுதொடர்பாக சபையிலும் சபைக்கு வெளியிலும் பல தடவைகள் கதைத்திருக்கின்றனர்.
இந்த பிரதேச செயலகம் விவகாரத்தில் 90களில் அமைச்சரவை அனுமதி கொடுக்கப்பட்டது. ஏன் இதுவரை செய்யப்படவில்லை.
35 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த விடாமல் அரசியல்வாதிகள் தலையீடு செய்கிறார்கள். அதனால் இது இடம்பெறுவதில்லை என்றெல்லாம் குறை கூறப்படுகிறது.
உண்மைக்கு புறம்பான இந்த விடயம் தொடர்பில் இதன் உண்மை தன்மை தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் தமிழ் அரசுக்கட்சியினரும் பல தடவைகள் எங்களுக்குள் கலந்துரையாடி தீர்த்துக்கொள்ள முயற்சித்திருக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
