டேசி பொரஸ்ட் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதி
புதிய இணைப்பு
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இன்று(05) கைது செய்யப்பட்ட டேசி பொரஸ்ட் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் அவர் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டார்.
முதல் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கும் மிகவும் நெருக்கமான உறவினரான டெய்சி பொரெஸ்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணமோசடி சட்டத்தின் கீழ் வாக்குமூலம் அளிக்க அவர் இன்று (05) குற்றப் புலனாய்வுத் பிரிவுக்கு சென்றிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றச்சாட்டுகள்
டெய்சி பொரெஸ்ட் என்ற பெண்மணி ராஜபக்சர்களின் பினாமியாக செயற்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
You My Like This Video