புனித ஹஜ் பெருநாள் - நாடு முழுவதும் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு இலங்கையில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்களின் மத விழாக்களில் ஒன்றான புனித ஹஜ் பெருநாள் இம்முறை மே 28 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.
இலங்கையில் அனைத்து துறையினரும் மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறை - அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்
விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்
இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் பிரகாரம், விசேட தொழுகைகள் நடைபெறும் பள்ளிவாசல்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கும் வகையில் பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அத்துடன் முக்கிய வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள பிரதேசங்களில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.