ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்.. தயாசிறி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் கணினி முறைமையைக் கட்டுப்படுத்திய ஹேக்கர்கள், கிரிப்டோகரன்சியாக 50,000 அமெரிக்க டொலர்களைக் கப்பமாக கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.
மேலும், தேசிய விமான சேவை இன்னமும் சைப்ர தாக்களுக்கு ஆளாகக்கூடிய அபாயத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இன்று (20) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இத் தகவலை வெளியிட்டார்.
2026 ஜூன் மாதத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் கணினி கட்டமைப்புகள் ஊடுருவபட்டதாகவும், அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஹேக்கர்கள் டார்க் இணைய காணொளி ஒன்றையும் வெளியிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
50,000 அமெரிக்க டொலர்கள்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் மின்னஞ்சல் அமைப்புகளும் ஊடுருவப்பட்டுள்ளதால், அதன் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் பாதுகாப்பு குறித்து தீவிர கவலை எழுந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர், "இப்போதும் கணினி முறைமை ஹேக்கர்களின் கையிலேயே உள்ளது, அவர்கள் எப்போது வேண்டுமானாலும் அதை முடக்கலாம்" என எச்சரித்தார்.
துபாய் மற்றும் இந்தியாவில் உள்ள கணக்குகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவுகள் தொடர்பான முந்தைய நிதி முறைகேடுகள், பாதுகாப்பு பலவீனங்களுடன் தொடர்புடையவையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்தச் சம்பவத்தை விசாரிக்க முயன்ற அதிகாரி ஒருவர் ஜனாதிபதி செயலகம் ஊடாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறிய தயாசிறி ஜெயசேகர, சிங்கப்பூரிலுள்ள பிரதிநிதிகள் ஊடாக அமெரிக்கா உதவ முன்வந்த போதிலும் அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
எனவே, இந்த ஊடுருவல் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, டிஜிட்டல் கட்டமைப்பைப் பாதுகாக்கவும், மேலதிக தாக்குதல்களைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 1 மணி நேரம் முன்
பிரான்சில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு: பாரிஸின் முக்கிய வீதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை News Lankasri