திருகோணமலை சண்முகா பாடசாலை அபாயா விவகாரத்தின் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது: இம்ரான் மகரூப்
திருகோணமலை பஹ்மிதா றமீஸ் ஆசிரியர் தொடர்பான அபாயா விவகாரத்தில் அதிபர் தரப்பானது வழக்குகளை இணக்கமாக முடித்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தமை மகிழ்ச்சியழிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (24.05.2023) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில் தெரிவித்ததாவது,
இவ்விடயமானது தமிழ் பேசும் மக்களிடையே நல்லதோர் நல்லிணக்கத்திற்கான சமிஞ்சையாக தென்படுவதாகவும் இரு தரப்பும் இணங்கி செல்வதன் மூலம் பலம்பெற முடியும்.
கிழக்கு மாகாணத்தை பொறுத்தளவில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களும் வாழ்கின்றனர்.
இங்கு, பல்சமய காலாசாரம் பின்பற்றப்படுகின்றது. எனவே, வெவ்வேறு இன அடையாளத்தை கொண்டவர்களாக இருந்தாலும் சரி, வெவ்வேறு சமயத்தை பின்பற்றினாலும் சரி, நமக்கிடையே புரிந்துணர்வும் சகிப்புத் தன்மையும் காணப்பட வேண்டும்.
அடுத்த கட்ட சிந்தனை
திருகோணமலை சன்முகா ஹபாயா விவகாரத்தில் ஆரம்பத்திலேயே பேசி தீர்மானமொன்றிக்கு வந்திருக்கலாம்.
ஆனால் துரதிஷ்டமான சில நடவடிக்கைகள் பல கசப்பான அனுபவங்களை தந்துவிட்டது.
மீண்டும், மீண்டும் இவற்றை பேசிக்கொண்டிருப்பதை விட்டு, நாம் இணக்கமாக அடுத்த கட்டத்துக்கு செல்வது பற்றி சிந்திக்க வேண்டும்.
அத்தோடு ஆசிரியை பஹ்மிதா தமது உரிமைக்காக நீண்ட நாட்கள் போராடினார். எனவே அவரை பாராட்டுவதோடு இவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மற்றும் சட்ட ஆலோசகர்களையும் பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
