சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிச் சூடு: மும்பையில் பரபரப்பு
பொலிவுட்டின் முன்னணி நடிகராக உள்ள சல்மான் கான் (Salman Khan வீட்டின் முன் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சம்பவம் இன்று (14.4.2024) அதிகாலை மும்பை (Mumbai) - பாந்த்ராவில் அமைந்துள்ள வீட்டின் முன்னால் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
மும்பை பொலிஸார் விசாரணை
இன்று அதிகாலை இவரது வீட்டு முன்னால் மோட்டார் சைக்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி 4 முறை சுட்டுள்ளனர்.
சத்தம் கேட்டு உடனடியாக வீட்டில் இருந்த காவலாளிகள் வெளியே வந்து பார்த்தபோது அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மும்பை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் பொலிவுட் திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri
