மன்னார் துப்பாக்கிசூட்டு சம்பவம்: மேலும் ஒருவர் கைது
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர், யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் - நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த சந்தேக நபர் யாழ்ப்பாணம் - பெரியவிளான் பகுதியில் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை நடவடிக்கை
நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை வியாழக்கிழமை (16) மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருந்தது.
இந்நிலையில் விசாரணைகளுக்காக சென்ற சந்தேக நபர்கள் மூவர் உள்ளடங்களாக நான்கு நபர்கள் மீது நீதிமன்றத்திற்கு முன் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இருவர் உயிரிழந்ததுடன் இ மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இராணுவத்துடன் தொடர்புடைய மூவர் உள்ளடங்களாக பலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசேட அதிரடிப்படை மற்றும் யாழ்ப்பாண பொலிஸார், புலனாய்வு பிரிவினரால் குறித்த சந்தேக நபரை நேற்றைய தினம் (2) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் மன்னாருக்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
