விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம் அமைந்திருந்த பகுதியில் துப்பாக்கிகள் மீட்பு
அம்பாறை - கஞ்சிக்குடியாற்றில் விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாமாகவிருந்த பகுதியில் எல்.எம்.ஜீ, துப்பாக்கி மற்றும் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளை இன்று மீட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட புலனாய்வு பிரிவு திருக்கோவில் பிரதேச பொறுப்பாளருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து திருக்கோவில் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எஸ்.எஸ். சமந்த தலைமையிலான பொலிஸார்,விசேட புலனாய்வு பிரிவினர் குறித்த பகுதிக்கு சென்று துப்பாக்கிகளை மீட்டுள்ளனர்.
இதன்போது,கஞ்சிக்குடியாற்றில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமாக இருந்த பகுதியில் இருந்த மலசல கூடத்துக்கு அருகில் கைவிடப்பட்டு துருப்பிடித்த எல்.எம்.ஜீ ரக துப்பாக்கியொன்றையும் மீட்டுள்ளனர்.
அதேவேளை,அந்த பகுதியிலுள்ள மலை குகையிலிருந்து உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி இரண்டையும் மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கிகள் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.









பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

வாட்டர் மெலன் திவாகர் முதல் அகோரி கலையரசன் வரை.. பிக் பாஸ் 9ல் நுழைத்த 20 போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ Cineulagam
