அநுராதபுரத்தில் குளமொன்றில் இருந்து துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு
அநுராதபுரம் அருகே குளமொன்றின் கரைப்பகுதியில் இருந்து துப்பாக்கியொன்றும் பெருமளவு ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிஹிந்தலை, மஹா கனதராவ குளத்தின் அருகில் இருந்தே குறித்த துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான பொதி
அநுராதபுரம் - திருகோணமலை வீதியில் உள்ள மிஹிந்தலையில், மஹா கனதராவ குளத்திற்கு அருகே தற்போது நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஒருவர், கைவிடப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொதியொன்றை அவதானித்துள்ளார்.

இது குறித்து மிஹிந்தலை பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த பொலிஸார் அந்த சந்தேகத்திற்கிடமான பொதியைச் சோதனையிட்டுள்ளனர்.
விசாரணை
அதன்போது குறித்த பொதியில் இருந்து ஒரு டி 56 ரக துப்பாக்கியும், 4 தோட்டாக்கூடுகள் மற்றும் 25 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் குறித்து மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening