தெமட்டகொட சமிந்தவின் சகோதரனை இலக்குவைத்த துப்பாக்கிதாரிகள்
மரண தண்டனை விதிக்கப்பட்டு பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவின் சகோதரனை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக பேலியகொட வடக்கு குற்றத்தடுப்பு பிரவு தெரிவித்துள்ளது.
சமிந்தவின் சகோதரருக்குச் சொந்தமான கொள்ளுப்பிட்டி இரவு விடுதிக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு T-56 துப்பாக்கி, 25 துப்பாக்கி ரவைகள் அடங்கிய ஒரு மகசின், போலி இலக்கத் தகடுகள் கொண்ட ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு தலைக்கவசம் மற்றும் இரண்டு பாதுகாப்பு தலைக்கவசங்கள் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
விசாரணை
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்த இரண்டு நபர்கள் அனுமதியின்றி T-56 துப்பாக்கியுடன் இரவு விடுதிக்குள் நுழைய முயன்றபோது, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி (பவுன்சர்) அவர்களை அனுமதிக்காமல் தடுத்ததாக தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு தலைக்கவசம்
மேலும், நபர்களில் ஒருவர் பாதுகாப்பு தலைக்கவசத்தால் அவரைத் தாக்கியபோது, அவர் துப்பாக்கியைப் பறித்துச் சென்றதாகவும், அதே நேரத்தில், இருவரும் தங்கள் மோட்டார் சைக்கிளை கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
தப்பியோடிய இருவரின் சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அவர்கள் கடல் பாதையில் பயணித்ததைக் கண்டுபிடித்ததாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் 8 அங்குல கூரிய ஆயுதம் மற்றும் மர கைப்பிடியுடன் கூடிய 4 1/2 அங்குல நீள கோடாரி, முழு முகத்தை மறைக்கும் மற்றொரு பாதுகாப்பு தலைக்கவசம் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



