அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச்சூடு! மாணவரொருவர் பலி
அமெரிக்கா - சியாட்டிலில் உள்ள பாடசாலை ஒன்றில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மாணவரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
வடக்கு சியாட்டிலில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே காலை வேளையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
ஒருவர் உயிரிழப்பு
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக அங்கு விரைந்து, காயமடைந்த மாணவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் படுகாயமடைந்த குறித்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் ஏனைய மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பாடசாலை மூடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கைது
இதனை தொடர்ந்து பாடசாலை முழுவதும் பொலிஸார் சோதனை நடத்திய நிலையில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுதது வருகின்றமை குறிப்பிடத்தக்கது.